பதுளை அதிபர் தொடர்பான விசாரணை அறிக்கையை ஏற்க முடியாது

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் முறையற்ற வகையில் நடத்தப்பட்டமை தொடர்பில், ஊவா மாகாண ஆளுனரின் பணிப்புறையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கை ஆசிரிய சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணை அறிக்கையில் அவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவினால் முறையற்ற வகையில் நடத்தப்பட்டதாக குறித்த பாடசாலை அதிபரினால் குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435