அரசாங்க ஓய்வூதியர்களுக்கான சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரிக்கை

அரசாங்க ஓய்வூதியர்களுக்கான சம்பள கட்டமைப்பில் இருந்து வருகின்ற முரண்பாடுகளை நீக்க அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான விசேட ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசாங்க ஊழியர்களின் சுயதீன தொழிற்சங்கங்கள் சம்மேளன தலைவர் அதிகாரி ஜயரட்ண கோரியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான விசேட ஆணைக்குழுவுக்கு சம்மேளனத்தின் சார்பாக எழுத்துமூலம் சிபாரிசு யோசனைகளை சமர்ப்பித்தபோதே முக்கியமாக இக்கோரிக்கையை முன்வைத்து உள்ளார்.

இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

முன்னாள் அமைச்சு செயலாளர் ஒருவர் பெற்று வருகின்ற ஓய்வூதியமும், அவருக்கு சிற்றூழியராக இருந்த ஒருவர் பெறுகின்ற ஓய்வூதியமும் ஒரே அளவில் உள்ளது.

குறித்த அமைச்சு செயலாளர் ஓய்வு பெற்று 20 வருடங்களுக்கு பின் சிற்றூழியர் ஓய்வு பெற்று இருக்கின்றார்.

எனவே இவ்வாறான சம்பள முரண்பாடுகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்க ஊழியர்களின் சுயதீன தொழிற்சங்கங்கள் சம்மேளன தலைவர் அதிகாரி ஜயரட்ண கோரியுள்ளார்.

இதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அரசாங்க ஊழியர்களின் சுயதீன தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் தமிழ் வெளியீடுகளின் பொறுப்பாளராக உள்ள செல்லையா இராசையா,

ஓய்வூதியர்களையும் அரசாங்க ஊழியர்களாக கொண்டு அவர்களுக்கான நீதியை பெற்று கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனத்தை கோரியதை அடுத்தே ஆணைக்குழுவுக்கு இச்சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வழிமூலம்: தமிழ்வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435