வடமாகாணத்திற்கு என தெரிவு செய்யப்பட்ட 71 தாதிய உத்தியோகத்தர்களுக்கும் நேற்று முற்பகல் வடமாகாண சுகாதார அமைச்சில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 24 தாதிய உத்தியோகத்தர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 12 தாதிய உத்தியோகத்தர்களும், மன்னார் மாவட்டத்திற்கு 13 தாதிய உத்தியோகத்தர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 10 தாதிய உத்தியோகத்தர்களும், வவுனியா மாவட்டத்திற்கு 12 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுனர் வெற்றிடத்திற்குவைத்திய நிபுனர் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு காது, மூக்கு, தொண்டை போன்றவற்றிற்கான விசேட வைத்திய நிபுனர் ஒருவரும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.