சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன ஒபெக் அமைப்பு அமைப்பை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு ஏற்றவாறு செயற்படுவதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
ஒபெக் அமைப்பின் ஆரம்ப நாடான ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தற்போது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளநிலையில், ஈரான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ளமை காரணமாக ஈரானின்; எரிபொருள் விநியோகம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டியுள்ள ஈரான், அது உலக அளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.