வடக்கில் தொழிலற்றோர் வீதம் அதிகரிப்பு: யாழில் எத்தனை வீதம் தெரியுமா?

யுத்த பாதிப்பு பிரதேசமான யாழ்ப்பாணத்தில் தொழிலற்றவர்களின் சதவீதம் கடந்த இரண்டு வருடங்களில் 10.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அரச புள்ளி விபரங்களை மேற்கொள் காட்டி ‘த எகனமிக்ஷ்ட் நெக்ஸ்ட்’ இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2015 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் தொழிலற்றோர் சதவீதம் 5.7 ஆகவும், 2016 ஆம் ஆண்டில் 7 வீதமாகவும் காணப்பட்டது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 3.7 சதவீதமாகவிருந்த தொழிலற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 4.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முகாம்களில் தங்கியிருந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திருப்பியுள்ள நிலையில், அவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள் இல்லாதநிலை தோன்றியுள்ளமை சில ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் போக்குவரத்து கட்டமைப்பு வீழ்ச்சிகண்டுள்ள நிலையில், போக்குவரத்துக்கு அதிகளவிலான அறவீடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கபடுகின்றது.

அத்துடன், கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொழிபுரியும் வாய்ப்பை இழந்துள்ளள்ளனர்.

இதேவேளை, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தொழிலற்றவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சிகண்டுள்ளது.

மன்னாரில் கடந்த 2016 ஆம் ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்த தொழிலற்றவர்களின் வீதம், கடந்த ஆண்டில் 3.8 வீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 5.2 வீதமாக இருந்த தொழிலற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில், 2.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 6.3 வீதமாக இருந்து தொழிலற்றவர்களின் வீதம் இந்த ஆண்டில் 6.1 வீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உற்பத்திசார் தொழிற்துறைகளின் வியாபக முயற்சியால் இந்த குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435