தோட்டத் தொழிலாளருக்காக போராட்டம் நிச்சயம்

மார்ச் 23ஆம் திக­திய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளபடி தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாளைய சம்பளத்தை 720 ரூபாவாக வழங்க தோட்ட நிர்வாகங்கள் தயாரில்லை. எனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 25ஆம் திகதி தொழிற்சங்க போராட்டம் நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்று முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நிவாரணப்படி தரும் 2016ஆம் வருட 4ம் இலக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள இவ்வேளையில் கூட்டு ஒப்பந்தம் அமுலில் இல்லை. ஆகவே, இல்லாத கூட்டு ஒப்பந்தம் தோட்ட தொழிலாளரை கட்டுப்படுத்தாது. எனவே ஏனைய துறையினருக்கு வழங்கப்படும் இந்த நிவாரணப்படி, தோட்ட தொழிலாளருக்கும் வழங்கப்பட்டே ஆகவேண்டும். எனவே இப்போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் பேதமின்றி கலந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435