பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, அதன் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொலன்னவை, சபுகஸ்கந்த, முத்துரரிவளை முதலான எரிபொருள் விநியாக மற்றும் மொத்த எரிபொருள் களஞ்சியசாலை ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பலியானார்.
அத்துடன், மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்;ளனர்.
அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தினுள் செல்ல முயற்சித்த போது பணியாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டதாகவும், அதனை தொடர்ந்து, அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தநிலையில், குறித்த சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோலிய வள கூட்டத்தாபன ஊழியர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக, நேற்று இரவு முதல் எரிபொருள் விநியோகப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபன உப தலைவர் பிரேமரத்ன கமகே தெரிவித்துள்ளார்.