போலி கடவுச்சீட்டு, வீஸா தயாரித்த கும்பல் கைது

​கடவுச்சீட்டுக்கள், வீஸா உட்பட வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான போலியான ஆவணங்களை பலவற்றை தயாரித்து மக்களை ஏமாற்றிவந்த கும்பலை குற்றப்புலனாய்வு பிரிவின் கட்டுநாயக்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் மூன்றாம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் போலியான கடவுச்சீட்டு மற்றும் வீஸாவுடன் குவைத் செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட விசாசரணைகளையடுத்து அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 28 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபரிடம மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து கொடிகாவத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 75 கடவுச்சீட்டுக்கள், பல நபர்களின் தேசிய அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரங்கள், போலி முத்திரை, சுமார் 2 இலட்சம் ரூபா பணம் என்பனவும் குறித்த வியாபாரததை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளையடுத்து மேலும் மூன்று நபர்களை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435