பெருந்தோட்ட யாக்கங்களுக்கும் திறைச்சேரிக்கும் இடையில் பேச்சு

செயலிழந்துள்ள பெருந்தோட்ட யாக்கங்களது பிரதிநிதிகளுக்கும், திறைச்சேரி அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்டம் என்பவற்றில் மீள தேயிலை பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது அதானம் செலுத்தப்படும்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இதில் அமைச்சர்களான எஸ்.எம் சந்ரசேன, சீ.பி ரத்நாயக்க, மக்கள் பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் அரச பெருந்தோட்டம் யாக்கம் ஆகியவற்றின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் திறைச்சேரி அதிகாரிகளுக்கும், குறித்த பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வழிமூலம்: சூரியன் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435