வடக்கு கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த தொண்டர் ஆசிரியர் பிரச்சினைக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தீர்வு பெற்றுக் கொடுத்தார்.
தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி நீண்டகாலமாக ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாத இருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் இந்த மாதம் மாதம் 29 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நாட்டின் பிரதமர் கௌரவ ரணில் விக்கரமசிங்கே மற்றும் கல்வி அமைச்சர் சட்டத்தரனி கௌரவ அகிலவராஜ் காரியவசம் ஆகியோரால் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன்தெரிவித்தார்
கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற போரின் தாக்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியராக பணியாற்றிய தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் கிடைக்காத பிரச்சனை நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு கல்வி ராஜாங்க அமைச்சராக பதவியேற்ற கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் எடுத்த முயற்சியின் பயனாக கடந்த மாதம் ஆயிரத்து 302 தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றிருந்தது வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆயிரத்து 302 பேருக்கு பேர் இந்த நேர்முகத்தேர்வில் அதில் ஆயிரத்து 130 பேர் தகுதிபெற்றுள்ளதாக தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அந்த நியமனங்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
UNP Jaffna News