சப்ரகமுவ மாகாணத்;தைச் சேர்ந்த தொழிலற்ற பட்டாதாரிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்வாங்கப்பட உள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சனத் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கான நிகழ்வு சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சில்; இடம்பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் நியமன பரீட்சைக்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்ட 460பேருக்கே இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது.
சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் மஹிந்த சனத் வீரசூரிய மற்றும் மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க ஆகியோர் தலைமையில் இடம்பெற உள்;ளது.
இதற்கமைய, கலை, கணிதம், பொறியல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல், பிரெஞ்சு, ஜேர்மன் முதலான கற்ககைகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.