சிறு மற்றும் மத்தியதர விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு 5 வருட வருமான வரிவிலக்களிப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், நூற்றுக்கு 28 சதவீதமாக இருந்த வரி வீதத்தை 14 சதவீதமாக குறைப்பதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சு நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, தேயிலை, தென்னை, இரறப்பர், நெல், பழவகைகள், மரக்கறி மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் என்பனவற்றுக்காக இந்த மாணியம் வழங்கப்பட உள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.