பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக, இலங்கையின் தேயிலை சந்தை தொடர்பான சர்வதேச நம்பிக்கை இல்லாமல் போகும் அச்சுறுத்தல் இருப்பதாக, முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொசான் ராஜதுரை இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்யா, ஜப்பான் போன்ற முக்கியமான நாடுகளின் சந்தை வாய்ப்பை இலங்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வௌ;வேறு தேயிலை உற்பத்தி நாடுகள் தற்போது தேயிலை நிரம்பலை அதிகரித்துள்ளன.
இந்தநிலையில் இவ்வாறான பணிப்புறக்கணிப்புகளால் இலங்கை தேயிலைத்துறை மீது சர்வதேச நாடுகளுக்கு அவநம்பிக்கை ஏற்படும் என்று ரொசான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போது தேயிலைக்கு நிலவும் விலையின் அடிப்படையில் தங்களால் வழங்கப்படக்கூடிய உயரிய தொகையை வேதனமாக அறிவித்திருப்பதாகவும், அதற்கு மேல் தங்களால் அதிகரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 600 ரூபாய் நாளாந்த அடிப்படை வேதனமாகவும், இதரக்கொடுப்பனவுகளுடன் சேர்ர்த்து நாளாந்தம் 940 ரூபாய் என்ற நாளாந்த வேதனம் வழங்க முன்வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வழிமூலம்: சூரியன் செய்திகள்