சம்பள உயர்வுகோரி பணிப்புறக்கணிப்பு: தொழிற்சங்கங்களிடையே பிளவு

1,000 அடிப்படை சம்பளம் வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டங்களின் பல பகுதிகளில் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சில தோட்டங்களில் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

பணிப்புறகணிப்பு விடயத்தில் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இணக்கப்பாடின்மையே இந்த நிலைமைக்கு காரணமாகும்.

1,000 ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என வலியுறுத்தி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் பெருந்தோட்டங்களில் இந்த பணிப்புறக்கணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆதரவளிக்கப்போவதில்லை என மலையகத்தின் ஏனைய தொழிற்சங்கங்களான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் பொதுச்; செயலாளர் பதவி வகிக்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன இந்தப் பணிப்புறக்கணிப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களில் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

எனினும், ஏனைய தொழிற்சங்கத்தை பிரதிநிதிதி;துவப்படுத்தும் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் தமது தொழிலை முன்னெடுத்து வருகின்றனர்.

பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுத்து 1,000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுத் தருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் போராட்டம் நடத்துவது சாதகமாக அமையாது என்று முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வுகோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் காலம் இதுவல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்;வாறிருப்பினும், 1,000 ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கும்வரை தமது போராட்டத்தை தொடர உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435