பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான அடிப்படை சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்;.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்;.
சம்பள உயர்வு விடயத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுடனும் இணைந்து தொழில் அமைச்சருடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா 1500 ரூபா என்றில்லாமல் நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
முதலாளிமார் சம்மேளனம் இணங ;காவிட்டால், அரசியல் ரீதியாக வர்;த்த்மானி அறிவித்தலை வெளயிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நிரூபிப்போம் என பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் கூறியுள்ளார்.