ஐக்கிய அரபு இராச்சியத்தில் சைபர் சட்டத்தை கடுமையாக்குவதுடன், சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையை உருவாக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வாட்சப் (WhatsApp) ஊடாக தமது அன்புக்குரியவருக்கு ‘idiot’ என்று எழுதி அனுப்புவதனால், குறித்த நபர் சமூகவலைதளம் ஊடாக ஒருவரை தூற்றிய குற்றத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 60 நாட்கள் சிறைத் தண்டனையும், 20, 000 திர்ஹாம் அபராதமும் செலுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், குறித்த நபர் தமது அன்புக்;குரியவருக்கு கேலியாக அவ்வாறு குறிப்பிட்டிருப்பாராயின், அதனூடாக தமது அபகீர்;த்தி ஏற்படுவதாக அன்புக்குரியவரினால் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக அந்த நாட்டில் வழக்கு தொடர்;ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதால், அவருக்கு சிறைத் தண்டனையும், அபாராதமும் விதித்தது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலைத்தளம்