பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் நாடாளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒருமீ என்ற சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமும்,
இலங்கை தொழில்நுட்ப வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கம்,
இலங்கை வங்கிசேவை சங்கம்,
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,
ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம்,
இலங்கை தோட்ட சேவை சங்கம்,
தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம்,
தொழிலாளர் போராட்டத்துக்கான மத்திய நிலையம்,
தபால் மற்றும் தொலை தொடர்புச் சங்கம்,
உள்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டமைப்பு,
இடதுசாரிகள் குரல்,
மொன்லார் நிறுவனம்,
பிரெக்சிஸ் ஒன்றியம்,
ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம்,
புதிய தலைமுறை,
காப்புறுதி சேவை சங்கம்,
அரச அச்சக கலைஞர்கள் சங்கம்,
கிறிஸ்தவர்களின் மலையக அமைப்பு
ஆகிய அமைப்புக்கள் இணைந்து ‘ஆயிரம் இயக்கம்’ என்ற பொது பெயரில் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த அமைப்புக்களை தவிர வேறு எந்த குழுக்களும் நடாத்தும் போராட்டங்களுக்கு தாங்கள் பொறுப்பு கூறுவதில்லை என ஆயிரம் இயக்கம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள போராட்டமானது, கேகாலை, பதுளை, அப்புத்தளை, தெமோதரை, எட்டம்பிட்டிய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாத்தளை, பொகவந்தலாவ, ஹட்டன், மத்துகம, மட்டக்களப்பு, பதுரலிய, தலவாக்கலை, ராகல, நுவரெலியா, தெல்தோட்டை, இரத்தினபுரி முதலான இடங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், ருகுணு ஜயவர்த்தனபுர, தென்கிழக்கு, சப்ரகமுவ, கிழக்கு ரஜரட, களனி, வடமேல் மற்றும் பேராதனைப் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு முன்னாலும் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இதேநேரம், பிரதான எதிர்ப்பு பேரணி சகல பொதுநல அமைப்புக்களதும் பங்களிப்புடன் கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.