நாட்டிலுள்ள கைவினைக் கலைஞர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சினால் பாசுரக்ஸ் என்ற பெயரில் இக்காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்துள்ள 28,000 கைவினைஞர்களுக்கு முதற்கட்டமாக இக்காப்புறுதி வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து 2023ம் ஆண்டில் அனைத்து கலைஞர்களும் இக்காப்புறுதித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இப்புதிய காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாட்டின் பாரிய சுயதொழில் முயற்சிகளில் ஒன்றாக கைவினைத்துறை காணப்படுகிறது. சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகானவர்கள் முழு நேரத்தொழிலாக இத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.