கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை கிண்ணியா பட்டதாரிகள் கோரியுள்ளனர்.
நேற்று (20) மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே பட்டதாரிகள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான வேலையற்ற உள்ளனர் என சுட்டிக்காட்டிய பட்டதாரிகள் சில தினங்களுக்கு முன்னர் க.பொ.த உயர் தர மாணவர்களை ஆசிரிய உதவியாளராக நியமிக்கப்படவுள்ளதாக அறிவித்தமை எவ்விதத்தில் நியாயமானது என்றும் கேள்வியெழுப்பினர்.
பட்டதாரிகள் கடந்த ஆண்டு தொடக்கம் பல நாட்கள் தொழில் வழங்க கோரி ஆர்ப்பாட்டங்கள் , மகஜர்கள் ஜனாதிபதி பிரதமருக்கு வழங்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வேலை வாய்ப்பு வழங்கப்படாமையினால் அதிகமான பட்டதாரிகள் விரக்தி நிலையில் உள்ளனர் இதனை கருத்திற் கொண்டு உடனடியாக தொழில் வழங்குமாறு ஆளுநரிடம் பட்டதாரிகள் கோரிகை விடுத்தனர்.