நாளை மறுதினம் (21) முதல் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து நடவடிக்கையினை 50 சதவீதமாக குறைக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுடன் தனியார் பேருந்து தொழிற்துறைக்கு ஏற்ப்பட்டுள்ள அழுத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலைக்கு அமைய தமது தொழிற்துறையை முன்னெடுத்து செல்ல வேண்டுமானால் எரிபொருள் நிவாரணம் அல்லது கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.