வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான விசேட கலந்துரையாடலொன்று நாளை (26) நடைபெறவுள்ளது.
யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது. எனவே, அனைத்து பட்டதாரிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.