நாளை துக்க தினம்!

உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று (21) மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாளைய தினத்தை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார்.

மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இத்துக்க தினம் பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட வகையில் தலைநகரின் பல பாகங்களில் நடத்தப்பட்ட பல்வேறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களினால் நாட்டின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று (21) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் இன்று இரவு 8.00 மணி தொடக்கம் நாளை காலை 4.00 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி இன்று (22) மூன்று பேர் கொண்ட விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க இன்றும் சர்வதேச விமான நிலையம், கொழும்பு தனியார் பேரூந்து நிலையம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய அண்மை பிரதேசம் போன்றவற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணிகள் தொடரும் நிலையில் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் இன்று இரவு முதல் 10 நாளைக்கு அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளது.

மக்கள் அனைவரையும் பாதுகாப்ப இருக்குமாறும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இத்தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் முப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435