தற்போது நடைமுறையில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பில் திருத்தம் செய்யப்பட்டு 2021/ 2ம் இலக்க அதி விசேட வர்த்தமான அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 22ம் திகதி அவ்விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இத்தனைக் காலமும் ஆசிரியர் சேவையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு இப்புதிய திருத்தத்தினூடாக தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்களின் நன்மைக் கருதி குறித்த திருத்தம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதுடன் திருத்தத்திற்கான அனுமதியை அரச சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.