துருணு திரிய கடன் திட்டத்தினூடாக 715 பேருக்கு கடன்

எண்டர்ப்ரைஸ் சிறிலங்க திட்டத்தின் துருணு திரிய கடன் முன்மொழிவின் கீழ் 715 பேருக்காக 294 மில்லியன் ரூபா கடன் கடந்த மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேற்கு, வடக்கு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த சுய தொழில் முயற்சியாளர்களே அதிகமாக கடன் பெற்றுள்ளனர். அவர்களில் 61 வீதமானவர்கள் பெண்களாவர். அழகு நிலையங்களுக்காகவே அதிகமாக கடன் பெறப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பட்டப்படிப்பு அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க சுய தொழில் தொழிலுக்கான சான்றிதழுடன் 3 வருடத்திற்கு குறையாத காலம் தொழிலில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். வயது 40 வருடங்களுக்கு குறைவாக இருந்தால் இக்கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை வங்கி, பிரதமர் காரியாலயத்தின் கொள்கை அபிவிருத்தி காரியாலயம், தேசி கொள்கை, தேசிய கொள்கை, பொருளாதார விவகார , மீள்குடியேற்றல் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்கல்வி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மத்திய வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவு மற்றும் சிறு வியாபார பிரிவு உட்பட நாட்டின் அனைத்து பிரதேச செயலகம், மாவட்ட செயலகங்களின் பங்களிப்புடன் இக்கடன் திட்டம் நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435