பணியிடங்களில் உரிய முறையில் சம்பளம் வழங்கப்படாத இந்தியர்கள் உடனடியாக ஐக்கிய அரபு இராச்சியத்தியத்திற்கான இந்திய தூதரகத்தை அணுகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் சம்பளம் வழங்காமல் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அல்லது டுபாயில் உள்ள இணை துதரகத்தில் முறையிடுமாறு தமது உத்தியோகப்பூர்வ டிவிட்டரில் வௌியிடப்பட்டுள்ளது.
தொழில் நாடுவோரை இலக்கு வைத்து இந்தியாவில் வீஸா மோசடிகள் மற்றும் ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக அறிவுறுத்தியுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இந்திய தூதரகம், சுற்றுலா வீஸா பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வரவேண்டாம் என்றும் நாட்டுக்கு வர முன்னரே நியமனக் கடிதம் மற்றும் அனுமதிக் கடிதம் என்பவற்றை பெற்றுக்கொள்ளுமாறும் சுட்டிக்காட்டியுள்ளது.