இரண்டாம் மொழி (தமிழ்/ சிங்களம்) ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கான தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் அனுசரணையுடன் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடாத்தப்படும். இப்பயிற்சி நெறியானது முழு மற்றும் பகுதி நேர அடிப்படையில் 600 மணித்தியாலங்கள் கொண்டதாக அமையும்.
க.பொ.த சாதாரணதரப்பரீட்சையில் தமிழ்/சிங்கள மொழி உட்பட 3 பாடங்களில் திறமைச்சித்தி பெற்றிருத்தல் அவசியம். அத்துடன் க.பொ.த சாதாரணத்தரப்பரீட்சியில் இரண்டாம் மொழி (தமிழ்/ சிங்களம்) மொழியல் குறைந்தது சாதாரண சித்தியைப் பெற்றிருத்தல் அல்லது தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட 100 மணித்தியாலத்திற்கும் மேற்பட்ட கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல் அல்லது அரச கரும மொழிகள் திணைக்களம்/ பல்கலைகமொன்றில் இரண்டாம் மொழி, (தமிழ்/ சிங்களம்) கற்கைநெறியினை பூர்த்தி செய்திருத்தல், க.பொ.த உயர்தரத்தில் முதலாம் மொழியில் (தமிழ்/ சிங்களம்) சித்தியை பெற்றிருத்தல் மற்றும் க.பொ.த சாதாரணதரத்தில் தமிழ் இலக்கியம் அல்லது சிங்கள இலக்கியத்தில் C சித்தியைப் பெற்றிருத்தல் என்பன தகைமைகளாக கொள்ளப்படும்.
மேலதிக விபரங்களை 011 3092 903 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்.