வௌிநாட்டில் வேலை செய்யும் போது விபத்துக்குள்ளாகி அங்கவீனமுற்ற வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கான ‘சஹன நிவச’ திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபா வழங்க இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று (22) தேசிய வீடு அபிவிருத்தி அதிகாரசபையுடன் இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
பணியகம் சார்ப்பில் அதன் தலைவர் ஏ.ஏ.எம் ஹில்மியும் அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரியவும் கைச்சாத்திட்டனர்.
இந்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இத்திட்டத்தின் முழுமையான கண்காணிப்புச் செயற்பாடுகளை தேசிய வீடமைப்புச்சபை மேற்கொள்ளும்.
குறித்த ஒரு மில்லியன் ரூபா நிதியை பணியகத்தினூடாக 6 கட்டங்களாக நிதி வழங்கப்படும். இந்நிதியுதவியை பெறுவதற்கு வௌிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல முன்னர் பணியத்தில் பதிவு செய்திருப்பது அத்தியவசியமாகும். ஏற்கனவே வீடுள்ளவராக இருப்பின் அவருடைய அங்கவீனத்திற்கமைவாக வசதிகள் செய்து வீடு திருத்தியமைக்க நிதியுதவி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.