கல்வியியற் கல்லூரிகளில் மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் ஆரம்பமாகவுள்ளது.
2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய கல்வியற் கல்லூரிகளில் தேசிய கல்வி போதனா டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கு இம்முறை இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
2012,2013 ஆம் ஆண்டுகளில் கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி போதனா பயிலுனர்களை இணைத்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டமை அடுத்து உருவான சிக்கல்களை தீர்க்கும் வகையில் கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டுக்கு இரு குழுக்கள் என்ற அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதன்பிரகாரம் 27 பாடநெறிகளுக்காக 2016 ஆம் ஆண்டில் க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் பிரகாரம் 4000பேரும் , 2017 ஆம் ஆண்டு உ.தர பெறுபேறுகளின் படி 4000 பேருமாக மொத்தம் 8000 பேரை நாடளாவிய ரீதியிலுள்ள 19 கல்வியற் கல்லூரிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
2019 ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் நேர்முக பரீட்சைக்கு தோற்றுவதற்கான அழைப்பு கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் மூன்றாம் வாரம் முதல் கல்வியற் கல்லூரிகள் மட்டத்தில் நேர்முக பரீட்சைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.