ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் கூட்டுத்தாபன வளாகத்தில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் தொடர்பில் விளக்கம் கோரியே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இடமாற்றம் தொடர்பில் தாம் விளக்கம் கேட்டபோதிலும் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் ஆகியோர் எவ்வித விளக்கமும் வழங்கவில்லையென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த இடமாற்றமானது காரணமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இடமாற்றங்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை, பொருத்தமற்றவர்கள் அப்பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொறுப்பதிகாரிகள் உரிய பதிலை வழங்காமையினால் போராட்டக்காரர்கள் அதிக கோபத்துடன் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.