50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க இன்னும் நிதி கிடைக்கவில்லை

வரவு செலவு திட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவு குறித்து அடுத்த வாரம் திறைச்சேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்துடன் மேலதிகமாக 50 ரூபா வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கைக்கு பின்னர் இந்த 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கொடுப்பனவு உரிய காலப்பகுதியில் வழங்கப்படாததை அடுத்து தோட்ட தொழிலாளர்கள் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் இது தொடர்பாக அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் வினவப்பட்டபோது அவர்இ இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு தேயிலை சபை வழங்குவதாக தெரிவித்த தொகையை வழங்க முன்வந்துள்ளது.

இருப்பினும் திறைச்சேரியில் இருந்து கொடுப்பனவுக்காக வழங்கப்பட வேண்டிய நிதி இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அடுத்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண உள்ளோம் என்று அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

வழிமூலம்: news.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435