நாட்டின் தற்போதைய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கல்விப் பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் பாடசாலைகளில் விநியோகிக்கப்படும் அலுவலர் ஆள் அடையாள அட்டை விடயத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது விடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள வலய கல்வித் திணைக்களங்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெருந்தொகைப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அலுவலர் அடையாள அட்டை விநியோகிப்பதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களிடம் இருந்து மாறுபட்ட தொகைகளில் பணம் அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.