கஷ்டப்பிரதேச கொடுப்பனவு அறிவிப்பின்றி நிறுத்தம்

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவு எவ்வித அறிவித்தலும் இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் தொடக்கம் இக்கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்கராயன், ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், கோணாவில், யூனியன்குளம், கராஞ்சி, வலைப்பாடு, ஜெயபுரம் போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கஷ்டப்பிரதேச கொடுப்பனவே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் ஒழுங்கான வீதிப்போக்குவரத்து வசதிகள் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் காணப்படாத நிலையில் ஆசிரியர் பெறும் சிரமங்களுக்கு மத்தியிலேயே குறித்த பாடாசலைகளுக்குச் சென்று தமது சேவையை வழங்கி வருவதாகவும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க பொறுப்பான அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435