வடக்கு, கிழக்கில் 1117 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளது.
தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்;க எதிர்வரும் 27 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது, வடமாகாணத்தில் 378 தொண்டர் ஆசிரியர்களுக்கும், கிழக்கு மாகாணத்தில் 739 தொண்டர் ஆசிரியர்களுக்குமான நிரந்தர நியமனங்களும் வழங்கப்படவுள்ளன.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம், தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால் முன்னெடுக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது.
இதற்கமைய, குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.