ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைக்குமாறு கோரிக்கை

பெருந்தோட்ட பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை விரைவில் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மலையக ஆசிரியர் உதவியாளர்கள், அவர்களின் நியமனத்திற்கு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்;த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை தற்போது பூர்த்தி செய்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் தொடர்ந்தும் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படாமையினால் குறைந்த வருமானத்திலேயே தொழில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435