சாரதி தொழில் பெற்றுத்தருவதாக குவைத் சென்ற 35 பேர் நேற்று (25) ஏமாற்றத்துடன் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி உரிய சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காத நிலையில் குவைத்துக்கான இலங்கை தூதரகத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்ைள மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதனையடுத்து வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியழைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குறித்த இலங்கையர்கள் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணிகயத்தில் உரிய முறையில் பதிவு செய்து வௌிநாடு சென்றமையினால் அவர்கள் குறித்த ஆராய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு இயன்றுள்ளது. எனவே, இவ்வாறு தொழில்வாய்ப்புக்காக வௌிநாடு செல்பவர்கள் பணியகத்தில் உரிய முறையில் பதிவு செய்து செல்வது அவசியம் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது