சுகாதார சேவையாளர் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட நேரம் ஒதுக்குக

சுகாதார சேவையாளர்கள் எதிர்நோக்கும் விரைவில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் இன்று (12) கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அச்சங்கத்தின் பிரதான செயலாளர் டெம்பிட்டியே சுகனாநந்த தேரரின் கையெழுத்துடன் இன்று (12) இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
1. கொவிட் 19 தொற்று நிலைக்கு முகங்கொடுப்பதற்கு அவசியமான பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் முகங்கொடுப்பதற்கான உரிய திட்டமிடல் இன்மை

2. 180 நாட்கள் பூர்த்தி செய்த ஊழியர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளாமை மற்றும் மாகாணசபைகள் பணியாற்றும் தற்காலிக பணியில் உள்ள ஊழியர்கள் வருடக்கணக்கில் நிரந்தர நியமனததிற்குள் உள்வாங்கப்படாமை.

3. ஆளணி பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினை

4. நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வைத்திசாலையில் வழங்கப்பட்டு வந்த உணவு திடீரென நிறுத்தப்பட்டமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினை,

5. மேலதிக கொடுப்பனவை உரிய முறையில் வழங்கப்படாமை மற்றும் மேலதிக கொடுப்பனவை குறைத்தல் மற்றும் மேலதிக கொடுப்பனவை ரேட் முறையில் வழங்காமை.

மேற்கூறப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வருமாறும் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட கூடிய விரைவில் நேரம் ஒதுக்கித் தருமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435