வௌிநாடு செல்வோரின் நன்மைகளை விஸ்த்தரிக்கும் பணியகம்

வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்லும் இலங்கையருக்கான நன்மைகளை விஸ்தீரப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அன்மையில் நடைபெற்றது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமானது, அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி, மக்கள் வங்கியுடன் இக்கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.

புலம்பெயர்தலுக்கு முன்பான கடன் திட்டம், சுயதொழிலுக்கான கடன் திட்டம் மற்றும் வீடமைப்புக்கடன் திட்டம் என்பவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் முதற்கட்ட கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்கள் வங்கி பிரதிநிதிகள் தற்போது பெற்றுக்கொடுக்கும் 50,000 ரூபா புலம்பெயர்தலுக்கு முன்பான கடனை 5 இலட்சம் வரை அதிகரிப்பது குறித்தும் வீடமைப்புக் கடனை 5 இலட்சம் வரை அதிகரிப்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அதேபோன்று தற்போது செயற்படுத்தப்படாதுள்ள சுயதொழிலுக்கான கடன் வழங்கல் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் இரு வங்கிகளும் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலகுவான சட்டதிட்டங்களுடன் கடன் வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் பணியகத்தின் மேலதிக பொதுச்செயலாளர் கிஷோலி பெரேரா, பிரதி பொது முகாமையாளர் (சமூக அபிவிருத்தி) பி. பி. வீரசேக்கர, நலன்புரி பிரிவின் முகாமையாளர் அநுர குமார சூரியாராய்ச்சி மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435