மின்சாரசபையில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இரண்டு இலட்சத்து 25ஆயிரம் ரூபா பணம் வசூலித்த நபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் கடிதம் மற்றும் பிரதமரின் கடிதம் மற்றும் மின்சாரசபை திணைக்களத்தின் கடிதம் ஆகியன போலியான முறையில் தயாரிக்கப்பட்டு
மின்சாரசபை திணைக்களத்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்
ஹட்டன், இலங்கை பேருந்து சபையில் பணியாற்றி ஒய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நபர் யுவதி ஒருவருக்கு தொழிவாய்பு பெற்றுத்தருவதாக கூறி இது போன்ற போலியான ஆவணங்களை தாமே தயாரித்து குறித்த யுவதிக்கு தொழில்வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இவ்வாறு பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். இது தொடர்பில் குறித்த யுவதி ஹட்டன் முறைப்பாடு செய்ததையடுத்து ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.