வீட்டுப்பணிப்பெண்களாக ஓமான் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 41 பெண்கள் இன்று (27) நாடு திரும்பினர்.
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த பெண்கள் தொழில்வழங்குநர்களினால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு சம்பளமின்றி பணியாற்றியவர்கள் ஆவர்.
குறித்த பெண்கள் 2 வருடங்களுக்கும் குறைவாக பணியாற்றியுள்ள நிலையில் இதுவரை சம்பளம் வழங்கப்பட்டிருக்கவில்லை. சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டதனால் அவர்கள் பணியாற்றிய வீடுகளில் இருந்த தப்பிச் சென்று அந்நாட்டு முகவர் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த போது அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதுடன் அவர்களுக்கான சம்பளத்தையும் முகவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அந்நாட்டுக்கான இலங்கை தூதரகத்தை நாடிய குறித்த பெண்கள் ஓமானின் ‘சபாயா கிலிஸ் மற்றும் அபு அலிபா ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்விடைத்தங்கல் முகாம்களில் இலங்கை பணிப்பெண்கள் மாத்திரமன்றி ஆப்பிரிக்கப் பெண்களும் தஞ்சம் புகுந்துள்ளனர் என இலங்கைப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பெண்கள் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து சென்று ஒ.வி 431 விமானத்தினூடாக காலை 8.10 இற்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தமை