பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என தேயிலை சபை தெரிவித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியினால் உறுதியளிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா மேலதிக நாளாந்த கொடுப்பனவு, கடந்த மே மாதம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை குறித்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த விடயம் தேயிலைச் சபையின் தலைவர் லூஸில் விஜேவர்தனவிடம் எமது செய்திச் சேவை வினவியபோது, குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு, வருடம் ஒன்றிற்காக 1.5 பில்லியன் ரூபா அவசியமாகும்.
அந்த நிதியானது, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு அல்லது திறைசேரியினால் தேயிலை சபைக்கு வழங்கப்பட வேண்டும்.
எனினும், இதுவரை குறித்த நிதி ஒதுக்கீடு எதுவும் தேயிலை சபைக்கு கிடைக்கப்பெறவில்லை என தேயிலை சபையின் தலைவர் லூஸில் விஜேவர்தன தெரிவித்தார்.
வழிமூலம்: சூரியன் செய்திகள்