எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட ரயில்வே தொழில்நுட்ப சேவையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்காமையினால் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு கடந்த திங்கட்கிழமையளவில் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்தபோதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.