அரச சேவையில் உள்ள 14 இலட்சம் ஊழியர்களுக்கு உரித்தான அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிருவாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் நோய்வாய்ப்படும் போதான சிகிச்சை செலவு உட்பட பல நன்மைகளைக் கொண்ட அக்ரஹார காப்புறுதித் திட்டமானது ஓய்வு பெற்ற 6 இலட்சம் அரச ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து காப்புறுதி நன்மைகளும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.