கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளுக்கு பூரண உதவிகளை வழங்குவேன் என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் எம்பிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (31) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற போதே கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை பட்டதாரிகளின் தொழில் உரிமைகளை கேள்விக்குறியாக்கும் உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாட்டை நிறுத்தி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அனைவரையும் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் அரச நியமனத்தில் உள்வாங்குவதன் மூலம் பட்டதாரிகளின் தொழில் உரிமையை உறுதிப்படுத்துங்கள் எனவும் குறிப்பிட்டனர்.இக்கலந்துரையாடலில் அடுத்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
மகஜரில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது இலங்கையில் 30 வருடம் நடைபெற்ற யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எமது நாட்டில் உயர் தரத்தில் சித்தி பெறுபவர்கள் எஸ் என்று குறிப்பிடப்பட்ட அனைவரும் பல்கலைக்கழகம் சென்று கல்வி பயில தகுதியானவர்களே ஆனால் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வளப் பற்றாக்குறை காரணமாக கணிசமானவர்கள் உள்வாங்கப்படுகின்றனர் ஏனையோர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் வெளிவாரியாக பட்டம் பெற்று வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
இந்நடைமுறை நாங்கள் அறிந்த வரை 20 வருட காலமாக நடைமுறையில் உள்ள விடயம் அதற்கு எடுத்துக்காட்டாக 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் 63 ஆயிரம் பட்டதாரிகளுக்கு உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடின்றி நியமனங்களை வழங்கினார்.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 70,000 பட்டதாரிகளுக்கு உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடின்றி நியமனங்களை வழங்கினார்.
ஆனால் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐந்து வருடங்களில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாக உறுதி அளித்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு 30 ஆயிரம் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அல்லாடிக் கொண்டிருக்கிறது அந்த வகையில் பட்டதாரிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்வாரி மற்றும் வெளிவாரி என்ற பேதமே உருவாக்கி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் தரத்தை கேள்விக்கு உட்படுத்தி வருகின்றது எனவும் அம்மா கிரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 3200 உள்வாரி பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனம் தற்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கும் 16,800 உள்வாரி பட்டதாரிகளுக்கான நியமனம் ஆகியனவாகும்.
இந்த அரசாங்கம் தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் அணைத்துக்கொண்டு ஆசிரியர்களையும் எது வித நிபந்தனையும் இன்றி உள்ளே இழுத்தது உயர்தரத்தில் ஒரு பாடத்தில் சித்தி அடைந்தவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அவசர அவசரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்தவர்களை துரிதமாக அரச நியமனத்தில் உருவாகிவரும் அரசு பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதில் தயங்குவது வேதனையை தருவதாகவும் அம் மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்நிலையினை தொடரவிடாமல் கீழ்வரும் எமது கோரிக்கைகளுக்கு அமைவாக அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பினை பெற்று தர ஆவண செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் 2012 தொடக்கம் 2018 வரை உள்ள வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் மற்றும் HNDA, HNDE பட்டதாரிகள் அரசு நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடாமல் விசேட சலுகை அடிப்படையில் நியமனத்தில் உள்வாங்க வேண்டும்.
நாடு பூராவும் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகள் அரச நியமனம் பெற வயதை தாண்டிய நிலையில் காணப்படுகின்றார்கள் அவர்களை சலுகை அடிப்படையில் எவ்வித பாகுபாடுமின்றி அரச நியமனத்தில் உள்வாங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் வழி பட்டதாரி கல்வி பட்டதாரிகள் வெளிநாட்டு உள்நாட்டு பல்கலைக்கழகம் என்ற பாகுபாடின்றி அனைத்து பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.