
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க முன்வைத்திருந்தார்.
தேயிலைச் சபையினூடாக குறித்த 50 ரூபாய் கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் மாதம் முதலான நிலுவைக்கட்டணம் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலதிக விவரங்கள், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுடன் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.