நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையில் பணியாற்றிய 39 தாதியருக்கு காசல் வீதி மகளிர் மருத்துவமனையினூடாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாக அதிகாரி துஷார பண்டார ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய கடந்த 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடக்கம் 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் 21 மில்லியன் ரூபா அத்தாதியரின் சம்பளத்திற்காக இவ்வாறு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரச தாதியர் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற குறித்த தாதியருக்கு கடந்த 2017ம் ஆண்டு நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் ஆறு மாதங்களுக்கு (2018ம் ஆண்டு ஜூன் வரை) அம்மருத்துவமனை தொடர்ச்சியாக சம்பளம் வழங்கியுள்ளது. அப்பணத்தை 2018 ஜூன் மாதத்திற்கு பிறகு சுகாதார அமைச்சு திருப்பி செலுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சு அச்சம்பளப் பணத்தை வழங்குமாறு எம்மிடம் கோரியதற்கு அமைய அச்சம்பளம் மீள செலுத்தப்பட்டது. அரச தாதியர் கல்லூரிகளில் கற்ற தாதியர்களை தற்காலிமாக சட்டவிரோதமாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது தௌிவாக தெரிகிறது என்றும் நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஜே.பி.டி.ஆர் ஜயசேக்கர, நாயகம் அனுப்பி வைத்த கடிதங்களை சுட்டிக்காட்டிய குறித்த அதிகாரி மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த தாதியருடைய ஓய்வூதியக் காலத்தை கணிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தாதியர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றல் பெற்றுத்தருமாறு கோரிய நிலையில் அவர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றல் பெற்ற பின்னரும் சம்பளத்தை காசல் வீதி மகளிர் வைத்தியசாலை சம்பளப்பணத்தை வழங்க முடியுமா என சுகாதார அமைச்சு கோரியுள்ளது. இதற்கு கடிதம் மூலம் பதில் அனுப்பிய காசல் வீதி மகளிர் வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியசாலையின் நிதி பிரச்சினை காரணமாக அச்சம்பளப்பணத்தை வழங்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் என்றும் நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இக்குற்றச்சாட்டை சுகாதார அமைச்சு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- டெய்லி மிரர்