16,800 பட்டதாரிகளுக்கு தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பட்டதாரி பயிலுனர் நியனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
நியமனக்கடிதங்கள் கட்டம் கட்டமாக ஜூலை மாதம் 30ம் மற்றும் 31ம் திகதிகளிலும் ஆகஸ்ட் மாதம் 1ம் மற்றும் 2ம் திகதிகளிலும் மாவட்ட மட்டத்தில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் பட்டதாரி பயிலுனர்களாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.
பட்டம் வழங்கப்பட்ட திகதி உள்ளடங்கலான காரணிகளைக் கருத்தில் கொண்டு முன்னுரிமைப்படுத்தலின் அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்படுகின்றது என அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி மேலும் தெரிவித்தார்.
நன்றி- தினகரன்