வௌிவாரிப் பட்டதாரிகளுக்கு விரைவில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்தனர் என்று வௌிவாரி பட்டதாரிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நேற்று (20) தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் வௌிவாரிப் பட்டதாரிகளை புறக்கணித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலக பிரதானி அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது வௌிவாரி பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது என ஒருங்கிணைப்பின் அழைப்பாளர் மஹேஸ் அம்பேபிட்டிய தெரிவித்தார்..
காணப்படும் வெற்றிடங்களுக்கு எதிர்வரும் 27ம் திகதிக்கு முன்னர் வௌிவாரிப்பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமக்கு உறுதியளிக்கப்பட்டதாக அலரி மாளிகையின் முன்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹேஸ் அம்பேபிட்டிய தெரிவித்தார்.