அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (22) மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துத் தட்டுப்பாடு, உயர்தர பரீட்சையில் தோல்வியடைந்தவர்களுக்கு மருத்துவர் நியமனங்கள் வழங்க சுகாதார அமைச்சு முயற்சிக்கின்றமை, பல்வேறு சட்டதிட்டங்களினூடாக மருத்துவசபையின் இயக்கத்தை மட்டுப்படுத்தல் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது.
வேலைநிறுத்தம் தொடர்பில் போதிய அறிவின்றி வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.