அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலைநிறுத்தப்போராட்டத்தை நாளையும் (28) நாளை மறுதினமும் (29) நாடு தழுவிய வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன் 29ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேற்குறித்த வேலைநிறுத்தம் தொடர்பில் அங்கத்தவர்களை தௌிவுபடுத்துவதற்கும் ஆணையை பெறுவதற்குமான கூட்டமொன்று இன்று (27) பகல் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சகல சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்திற்கமைய வழங்கப்பட்ட 10,000 ரூபா அரச ஊழியர்களினதும் பல்கலைக்கழக ஊழியர்களினதும் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்ட போதிலும் சுமார் 15 வீத ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இத்தொகை இணைக்கப்படவில்லை. இம்முரண்பாட்டை உடனடியாக நீக்க வேண்டும். 08.08.2016 அன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கமைய வீட்டுக்கடன் வழங்கல், நிதித்தொகையினை அதிகரித்தல், ஆட்சேர்ப்பு முறையில் சேவையாளர்களின் கோரிக்கையை ஏற்றல், 2013ம் ஆண்டு நிறுத்தப்பட்டவேறு மொழி தேர்ச்சிக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவை மீண்டும் வழங்கல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஏற்கனவே இருதடவைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.