வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தெண்டர்கள் தமது நியமனங்களை வழங்கக்கோரி சாவச்சேரி நகர சபை மண்டபத்திற்கு முன்பாக நேற்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் தமக்குத் தாமே மண்ணெண்ணை ஊற்ற முற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்டகாலமாக பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நியமனங்களை வழங்குமாறு நீண்டகாலமாக போராடிவருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தில் பலர் புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளமையினால் நேற்று முன்தினம் தொடக்கம் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக இரவு இரவாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று சாவச்சேரி நகர சபை மண்டபத்திற்கு முன்பாக கூடிய போராட்டக்குழுவினர் தமக்கும் நியமனத்தை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுனர்.